முதல் முறையாக அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்

Sri Srinivasan has become the first Indian American and Asian to head a US court of appeals after taking over as Chief Judge of the Washington DC circuit from Merrick Garland.

0
232

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த நிலையில் உள்ள, கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, தமிழகத்தை சேர்ந்த  ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன், 52, நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக,2013ல் பதவியேற்ற, ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன், தற்போது, அதன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், தமிழகத்தின் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர்.

இந்தப் பதவிக்கு, தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

ஸ்ரீனிவாசனின் குடும்பம் சண்டிகாரில் வசித்து வந்தது.  கடந்த 1960ஆம் ஆண்டு அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. அமெரிக்காவிலேயே பட்டபடிப்பை முடித்த அவர், வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். முந்தைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால், கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டார்.

ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசனின் தந்தை நெல்லை மாவட்டம் மேல திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்தவர். கன்சாஸ் பல்கலையில் கணிதவியல் பேராசிரியராக பணியாற்றினார். தாயார் சென்னையை சேர்ந்தவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here