வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே ஆன 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். தனது முதல் இன்னிங்சில் 154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது. டாவ்ரிச் 125 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சிசை ஆடிய இலங்கை அணி 55.4 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச், காப்ரியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 72 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொண்டது.இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ரங்கனா ஹெராத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வெற்றி பெற 453 ரன்கள் என்ற இலக்காகை நோக்கி ஆட களமிறங்கிய இலங்கை அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. குசால் மெண்டிஸ் 94 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் குசால் மெண்டிஸ் சதமடித்து 102 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் பக்கம் சென்றது. பின்னர் வந்த இலங்கை அணி வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

முடிவில் இலங்கை அணி 83.2 ஓவரில் 226 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரோஸ்டன் சேஸ் 4 விக்கெட்டும், தேவேந்திர பிஷு 3 விக்கெட்டும், ஷானோன் காபிரியல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

DfWhCFIUwAE5CGr

இதையடுத்து, 226 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. ஷேன் டாவ்ரிச் ஆட்ட நாயகனான தேர்வு செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்