ஆப்கானிஸ்தான் அணி, அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தை வென்று தனது முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றது.

டெஹ்ராடுனில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 60 ஓவர்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 85 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 11வது வீரர் ஆட்டமிழக்காமல் 75 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 106.3 ஓவர்களில் 314 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 2வது இன்னிங்ஸில் அயர்லாந்து அணியால் 93 ஓவர்களில் 288 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.

இதனால் இந்த டெஸ்ட் ஆட்டத்தை வென்று தொடரை வெல்ல ஆப்கானிஸ்தான் அணிக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை 47.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. முதல் இன்னிங்ஸில் 98 ரன்கள் எடுத்த ரஹம்த் ஷா, 2-வது இன்னிங்ஸில் 72 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் தான் விளையாடிய 2 வது டெஸ்டில் முதல் டெஸ்ட் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here