இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்ச் 19 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்
களமிறங்கிய ஷான் மார்ஷ், மார்கஸ் ஸ்டாய்னிஸ்,கேப்டன் டிம் பெய்ன் ஆகியோர் மிக வேகமாக மிக்க் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 90 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.

அதைத்தொடர்ந்து மேக்ஸ்வெல், அஷ்டன் அகார் ஆகியோர் நிதானமாக ரன் சேர்த்தனர். மேக்ஸ்வெல் 64 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அகார் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதுதவிர ஆண்ட்ரூ டை 19 ரன்களும் மற்றவர்கள் ரன் எடுக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 214 ரன்களுக்கு ஆட்டமிழந்த்து.

இங்கிலாந்து அணி பந்துவீச்சில் மொயின் அலி, லியாம் பிளங்கீட் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், அடில் ரஷித் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய்2-வது பந்திலேயே டக்-அவுட் ஆக, ஜானி பேர்ஸ்டோவ் 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதைத்தொடர்ந்து வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோ ரூட், இயான் மார்கன் ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் சேர்த்தனர். மார்கன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும். அதன்பின் வந்த பட்லர் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ரூட் 50 ரன்களிலும் மோயின் அலி 17 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் டேவிட் வில்லே 35 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியை சிக்ஸர் அடித்து வெற்றி பெற செய்தார். இங்கிலாந்து அணி 44 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா அணியின் ஸ்டான்லேக், மைக்கெல் நிசர், ஆண்ட்ரூ டை ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் மொயின் அலி தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற 16-ம் தேதி கார்டிப் மைதானத்தில் நடைபெற உள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்