முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை டெண்டரை உறவினர்களுக்கு ஒதுக்கியது தொடர்பாக திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், முதல்வர் ஆலோசித்துதான் முடிவெடுப்பார் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று கூறிய நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, வழக்கின் ஆவணங்களை சிபிஐ வசம் ஓப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

முதல்வர் மீதே குற்றச்சாட்டு உள்ளதால் பொதுவான அமைப்பே விசாரிக்க வேண்டும். அதனால் சிபிஐ விசாரித்தால்தான் முறையாக இருக்கும் என்றும் முதல்கட்ட விசாரணையை 3 மாதத்தில் முடித்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்