எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முதல்வராகும்போது நான் ஏன் முதல்வராகக் கூடாது என டிடிவி தினகரனின் ஆதரவாளரான தங்கத் தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, ஆட்சியிலுள்ளவர்களில் ஆறு பேரைத் தவிர மற்றவர்கள் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றும், அப்படி அவர்கள் வந்தால் தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் பேசியிருந்தார். மேலும் அவர், தன்னோடு வந்த சட்டமன்ற உறுப்பினர்களில் 18 பேரில் யாராவது ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என்றார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தங்கத் தமிழ்ச்செல்வன், ஆறு பேரைத் தவிர மற்ற சட்டமன்ற உறுப்பினரகள் ஒத்துழைத்தால் மூன்று வருடங்களுக்கு ஆட்சி நீடிக்கும் என டிடிவி தினகரன் கூறியது சரி என்றார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்களில் 18 பேரில் யாராவது ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என டிடிவி தினகரன் பேசியது குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முதல்வராகும்போது நான் ஏன் முதல்வராகக் கூடாது என கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here