எப்படி யோசித்தாலும் புரியவில்லை. எந்த அடிப்படையில் தனுஷை அவரது ரசிகர்கள் அடுத்த சிஎம் என்கிறார்கள்?

ஜுலை 28 தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ஒட்டியிருந்த போஸ்டர்களில், வருங்கால சிஎம்மே, அடுத்த முதல்வரே போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. ஆர்வக்கோளாறு ரசிகர்களின் அர்த்தமற்ற வார்த்தைகள் என்று நமட்டு சிரிப்புடன் அதனை சமூகம் கடந்து சென்றது. ஆனால், அதன் பிறகு கேள்விப்படுகிற விஷயங்கள் கொஞ்சம் சீரியசானவை.

படப்பிடிப்புதளத்தில் தனுஷை பலரும் சிஎம் சார் என்றே அழைக்கிறார்களாம். பெயர் சொல்லி கூப்பிடக்கூடாது, சிஎம் சார் என்று கூப்பிட வேண்டும் என தனுஷே உத்தரவிட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்களில் முதல்வர், சிஎம் அடைமொழி வந்ததற்கும் தனுஷின் உத்தரவே காரணம் என்கிறார்கள்.

வசூலில் நேற்று வந்த சிவகார்த்திகேயனை முந்தவே திணறுகிறார் தனுஷ். அவருக்குள் இப்படியொரு அகண்ட கனவா?

ரஜினி, கமல் போல படவசூல் குறைந்ததால் வந்த கனவாக இருக்குமோ?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்