பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் எல்லா இடங்களிலும் நடக்கின்றன. அதைப்பற்றி பேசுவது இப்போது அதிகரித்திருக்கிறது என்று சொன்னாலும் அதை வெளியில் சொல்லி பிரச்சனையைத் தீர்ப்பதற்கான இடைவெளி இங்கு அதிகம்தான். எங்கு சொன்னால் நம் மேலேயே பழி போட்டு விடுவார்களோ என எண்ணி பெரும்பான்மையான பெண்கள் வெளியில் சொல்வதே இல்லை.

குறிப்பாக, கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் சீண்டல்கள் அன்றாடம் நடைபெறுகின்றன. பாலியல் பலாத்காரம் மட்டும்தான் பெண்ணுக்கு ஏற்படக் கூடிய உச்சக்கட்ட துன்புறுத்தலாக இங்கு நிலைநிறுத்தப்படுகிறது. ஆனால், சில பேச்சுக்களும், சீண்டல்களும் பாலியல் வன்முறைகள்தான். அதனை எல்லா இடங்களிலும் பெண்கள் எதிர்கொள்வது உண்டு.

டெல்லியில் குறிப்பாக இவை அதிகம். Old Delhi Films என்கிற யூடியூப் சேனல் டெல்லி பல்கலைக்கழக மாணவிகளை பேட்டி கண்டனர். அதில் பெண்கள் தங்களுக்கு முதல்முறையாக பாலியல் வன்முறை நிகழ்ந்த சம்பவத்தை விவரிக்கின்றனர். பாலியல் வன்முறைகளை பெண்கள் உரக்க சொல்ல வேண்டும் என்பதைத்தான் இந்த வீடியோ விளக்குகிறது. அதனை பாருங்கள்.

நன்றி: Old Delhi Films

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்