முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் பாஜக அதிகத் தொகுதிகளில் போட்டி

0
144

மக்களவைத் தேர்தலில் பாஜக 437 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இது அக்கட்சியின் வரலாற்றில் முதல்முறையாகும்.


கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 427 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 282 தொகுதிகளில் பாஜக வென்றது. அதேவேளையில் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 450 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 44 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.


மக்களவைத் தேர்தலில் மிக அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் பாஜக போட்டியிடுவது, அக்கட்சியின் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். அதேபோல், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் பாஜக போட்டியிடுவதும் இதுதான் முதல்முறை.


2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆந்திரத்திலும், தெலங்கானாவிலும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த முறை அந்த 2 மாநிலங்களிலும் பாஜக கூட்டணி அமைக்காததால், கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் பாஜகவே போட்டியிடுகிறது.


இதுமட்டுமன்றி, மக்களவைத் தேர்தலில் பாஜகவை விட குறைவான தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது இதுதான் முதல்முறை. இதற்கு, காங்கிரஸ் அதிக எண்ணிக்கையிலான கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருப்பதுதான் காரணம்.
கர்நாடகத்தில் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. இந்த முறை, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பீகாரில் புதிய கட்சிகளை சேர்த்துக் கொண்டு, தனது கூட்டணியை காங்கிரஸ் விரிவுப்படுத்தியுள்ளது.

BJP – 437 (2019), 428 (2014), 433 (2009)
Congress – 423 (2019), 464 (2014), 440 (2009)
BSP – 139 (2019) partial list, 503 (2014), 500 (2009)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here