முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் கொண்டாடிய விக்ரம், சூர்யா

0
928
Suriya & Vikram

சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின் ஸ்கெட்ச் படங்கள் இன்று வெளியாகியுள்ளன. அரசு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று திடீர் விடுமுறை அளித்ததால் தமிழகமெங்கும் இவ்விரு படங்கள் வெளியான திரையரங்குகளில் கட்டுக்கடங்காத கூட்டம். வரும் செவ்வாய்வரை விடுமுறை என்பதால் அதற்குள் பெரும் தொகையை இவ்விரு படங்களும் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முதல்நாள் முதல் காட்சியை சென்னை காசி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தார் சூர்யா. சொடக்கு பாடலுக்கு ரசிகர்களின் ஆட்டமும், படம் முழுவதும் கிடைத்த கைத்தட்டல்களும் சூர்யாவை உற்சாகப்படுத்தியிருக்கும். சமீபத்தில் தனது அறம் படத்தை நயன்தாரா இந்தத் திரையரங்கில்தான் ரசிகர்களுடன் கண்டு களித்தார். என்னை அறிந்தால் படத்துக்கு ரசிகர்கள் ஆதரவைப் பார்த்து அருண் விஜய் கண்ணீர்விட்டதும் இந்தத் திரையரங்கில்தான்.

தனது ஸ்கெட்ச் படத்தை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டுகளித்தார் விக்ரம். ரசிகர்களின் மூச்சுமுட்ட வைக்கும் ஆதரவில் விக்ரம் திணறித்தான் போனார். இந்தப் படங்களுடன் வெளியான பிரபுதேவாவின் குலேபகாவலிக்கும் கூட்டம் அள்ளுகிறது.

செவ்வாய்வரை பொங்கல் பண்டிகை விடுமுறை என்பதால் படம் எப்படி, படத்துக்கான ஆதரவு எப்படி என்பதன் உண்மையான நிலவரத்தை புதன்கிழமை அறிய முடியும்.

இதையும் படியுங்கள்: லோயா மரணத்திலுள்ள உண்மை வெளிப்படும்’: யஷ்வந்த் சின்கா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்