நாடு முழுவதும் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ்,தமிழகத்தில் தீவரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைளில் ஒன்றாக அனைத்து  கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.  

இதனால் செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் மீண்டும் கல்லூரிகள் தொடங்கும் அடுத்த பருவம் (கல்வி ஆண்டு) மற்றும் செமஸ்டரின்  தொடக்கத்தில் நடத்தப்படும். கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள் மீண்டும் திறப்பதற்கான தேதி அரசால் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதனைபோல், பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், அடுத்த கல்வியாண்டுக்கான பாடப் புத்தகம் அச்சடிப்பு பணி  துவங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

அனைத்து வகுப்பு பாடங்களுக்கு சுமார் 10 கோடி புத்தகம் அச்சடிக்க மார்ச் 9-ல் டெண்டர் விடப்பட்டது. மார்ச் 3-வது வாரம் டெண்டர் முடிவடைந்து ஏப்ரல் முதல் வாரம் அச்சடிப்பு துவங்கப்படும்.  கொரோனாவால் அச்சகங்கள் மூடப்பட்டிருப்பதால் புத்தகங்கள் அச்சடிப்பு பணி துவங்கவில்லை. ஆனால், அனைத்து வகுப்புகளுக்கும் இ-புத்தகம் இணையதளத்தில் வெளியிட அரசு தீவிரம் காட்டி வருகிறது. இணையத்தில் பாடப்புத்தகம்  ஏற்றப்படும் தகவலை மாணவர், பொற்றோருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தகம் அச்சடிப்பதில் காலதாமதம் ஆவதால் ஏற்படும் சிக்கலை தீர்க்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்கட்டமாக 10,11,12-ம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் இணையத்தில் வெளியிடப்படுகிறது. 2-ஆம் கட்டமாக 8 மற்றும் 9-ஆம்  வகுப்புகளுக்கு இ-புத்தகம் வெளியிட பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டிவருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

இருப்பினும், பாட புத்தகங்கள் இன்னும் அச்சடிக்க துவங்காதது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இணையதளத்தில் பாடபுத்தக்கம் வெளியிட்டாலும், கிராமப்புற மாணவர்களுக்கும் சென்றடையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here