இந்தியப் பங்குகள் தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் சரிவைத் தொடர்ந்து இந்திய சந்தைகளும் வெள்ளிக்கிழமை (இன்று) சரிவைக் கண்டன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்317.74 புள்ளிகள் சரிந்து 31,213.59 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி109.45 புள்ளிகள் சரிந்து 9,710.80 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவு பெற்றது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.11ஆக உள்ளது.

சரிவைச் சந்தித்த பங்குகள்

ஹிண்டால்கோ நிறுவனம்

ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹிண்டால்கோ நிறுவனத்தின் பங்குகள் 6.62 சதவிகிதம் சரிந்தன. முந்தைய வர்த்தக நாளான வியாழக்கிழமையன்று இந்நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 238.00 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 15.75 ரூபாய் சரிந்து 222.25 ரூபாயாக உள்ளது.


* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.138.50
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.244.90

வேதாந்தா நிறுவனம்

வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் 6.51 சதவிகிதம் சரிந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான வியாழக்கிழமையன்று வேதாந்தா நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 298.80 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 19.45 ரூபாய் உயர்ந்து 279.35 ரூபாயாக உள்ளது.


* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.306.70
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.158.40

ஓஎன்ஜிசி நிறுவனம்

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசியின் பங்குகள் 2.63 சதவிகிதம் சரிந்து காணப்படுகிறது. முந்தைய நாளான வியாழக்கிழமையன்று ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 163.70 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 4.30 ரூபாய் சரிந்து 159.40 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.


* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.211.80
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.151.00

ரிலையன்ஸ் நிறுவனம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.45 சதவிகிதம் சரிந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான வியாழக்கிழமையன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 1584.35 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 38.35 ரூபாய் சரிந்து 1545.30 ரூபாயாக உள்ளது.


* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.1664.90
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.930.00

இதையும் படியுங்கள்: ”உதயச்சந்திரனால் தமிழ் நாடு அரசுக்குத்தான் நல்ல பெயர்”: சவுக்கு சங்கர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்