நீட் தேர்வு குறித்து உடனடியாக பேசுங்கள் என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகளும் போராட்டங்கள் நடத்திவருகின்றன. இதற்காக தமிழக அரசும், மத்திய அரசிடம் பல முறை கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நீட் தேர்வில் நிரந்தர விலக்கு என்பதே கிடையாது என்றும், தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் மட்டும் நீட் தேர்விலிருந்து ஓராண்டு காலத்துக்கு விலக்களிக்க முடியும் என்றும் தெரிவித்தார். இதனைத் தமிழக அரசும் வரவேற்றுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு குறித்து உடனடியாக பேசுங்கள் என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ”நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைக் கூர்ந்து உடனே பேசுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

kamal

இதையும் படியுங்கள்: உங்கள் குழந்தை சரியாக படிக்கவில்லையா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்