தமிழ்நாட்டில்தான் சிஸ்டம் சரியில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஆனந்த விகடன் இதழில் நடிகர் கமல்ஹாசன் எழுதிய கட்டுரையில், ரஜினியும் தானும் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு உண்மையில் காலம்தான் பதில் சொல்லும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும் என்றும், இருவரும் சேர்வது தேவையா என்பதை இருவருமே யோசிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவது பற்றி காலம்தான் முடிவு செய்யும் என்றார். மேலும் சிஸ்டம் சரியில்லை என ரஜினிகாந்த் கூறியது குறித்து செய்தியாளர்கள், தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லையா அல்லது இந்தியாவில் சிஸ்டம் சரியில்லையா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தமிழ்நாட்டில்தான் சிஸ்டம் சரியில்லை என்றும், முதலில் இதை சரி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்