முதலில் அமெரிக்க சிகிச்சை அதன் பிறகே கட்சி கொடி பெயர் அறிவிப்பு

0
454

ஆன்மிக பயணமாக இமயமலை சென்றிருக்கும் ரஜினி எப்போது திரும்பி வருவார், எப்போது கட்சி பெயர் கொடி ஆகியவற்றை அறிவிப்பார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

முழுநேர அரசியலில் குதிப்பேன், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினி சொன்னபோதே ரசிகர்கள் அரசியலுக்கு தயாராகிவிட்டனர். கட்சி பெயர், கொடி ஆகியவற்றை அறிவிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு புதிய பட அறிவிப்பு ஏமாற்றம்தான். இப்போது இமயமலைக்குவேறு கிளம்பி சென்றுள்ளார். குருவிடம் ஆசிபெற்று வந்தபின் அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என ஆவலோடு காத்திருந்தனர். நாம் முன்பே கூறியது போல் இமயமலை சுற்றுப்பயணத்துக்குப் பிறகு ரஜினி அமெரிக்கா செல்கிறார். உடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், இளைய மகள் சௌந்தர்யா ஆகியோர் செல்கிறார்கள். அங்கு ரஜினி தனது வழக்கமான முழு உடல் பரிசோதனையை செய்கிறார்.

அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகே கட்சி பெயர், கொடி ஆகியவற்றை அறிவிக்கிறார் ரஜினி. ரசிகர்கள் இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

இதையும் படியுங்கள்: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முதலில் விவாதிப்போம் என்கிறார் ராஜ்நாத்சிங்; அவைகள் ஒத்திவைப்பு

இதையும் படியுங்கள்: உங்கள் பணத்தைத் திருடும் எஃப்.ஆர்.டி.ஐ சட்டம் ஏன் வேண்டாம்? நீங்கள் கேட்ட 5 கேள்விகள்

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here