முட்டை ஸ்டப்டு உருளைக்கிழங்கு பிரை எப்படி செய்ய வேண்டும் என்பதை இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் :

முட்டை – 5
மிளகாய் தூள் – 1 கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு – அரைக்கிலோ
வெங்காயம் – 1
தேங்காய்பால் – அரை கப்
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
மைதா – 2 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை :

முதலில் வேகவைத்த 4 முட்டையை எடுத்து 2 துண்டுகளாக வெட்டி வைத்துக்கொண்டு, பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளுங்கள். பின்பு ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு, மிளகு துள் போட்டு கலக்கி வைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, தேங்காய் பால், வெங்காயம், மைதா போட்டு நன்கு பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.

அதன் பின்னர் உருண்டையை கையில் வைத்து வட்டமாகத் தட்டி நடுவில் பாதி முட்டையை வைத்து மூட வேண்டும்.

அதனை கலக்கி வைத்த முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் போட்டு எடுக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதம் ரொட்டிதூளில் போட்டு எடுத்த முட்டையை எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுத்தால், முட்டை ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு ஃபிரை ரெடி.

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here