ருசியான முட்டை மசாலா வறுவல் ரெசிபி. உங்கள் சுவையை தூண்டும் முட்டை மசாலா வறுவல் சமையல் செய்து பார்க்கலாம் வாங்க.

சமைக்க தேவையானவை :

அவித்த முட்டை – 4 (கீறி வைக்கவும்)
வெங்காயம் – 2
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
மசாலா செய்வதற்கு: மிளகாய் தூள் – முக்கால் தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

முட்டை மசாலா வறுவல் செய்முறை :

1. முதலில் மசாலா செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு பவுலில் போட்டு சிறிது நீர் சேர்த்து கெட்டியாகக் கலந்து, அத்துடன் முட்டைகளைச் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

eggfry

2. கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, ஊறிய முட்டைகளைச் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.

eggfry1

3. மற்றொரு கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி கடுகு தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

4. வெங்காயம் வதங்கியதும், வறுத்த முட்டைகளைச் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.

spicy_hard_boiled_egg_fry

5. வெள்ளை சாதம் முதல் பிரியாணி வரை அனைத்திற்கும் ஏற்ற, எளிமையான, சுவையான மசாலா முட்டை வறுவல் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here