உங்கள் சுவையை தூண்டும் முட்டை மக்ரோனி சமையல்… முட்டை மக்ரோனி சமைத்து ருசிக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள் :

மக்கரோனி – 200 கிராம்
முட்டை – 2
தக்காளி – 1
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – ஒன்று
உப்பு – தேவைக்கு ஏற்ப
வெங்காயத்தாள் – 2
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
மிளகு தூள் – 2 தேக்கரண்டி
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 2 பல்
சோம்பு – ஒரு தேக்கரண்டி (பொடிக்கவும்)
பட்டை, இலவங்கம், ஏலக்காய் – தலா 1 (பொடிக்கவும்)
எண்ணெய் – தாளிக்

முட்டை மக்ரோனி செய்முறை :

1/முதலில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாள் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும் .

2/பிறகு பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும் .பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி ஒரு தேக்கரண்டி மிளகு, சிறிது உப்பு சேர்த்து அடித்து வைக்கவேண்டும்.

3/பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை ஊற்றி நன்கு கிளறி விட்டு தனியாக கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும் .

4/பின் மக்ரோனியை ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பதமாக வேக வைத்து இறக்கவேண்டும் . வெந்த பின் குளிர்ந்த நீர் விட்டு அலசி வைக்கவும்.

5/பின் வானலியில் எண்ணெய் விட்டு பொடித்த ஏலக்காய், பட்டை, இலவங்கம், சோம்பு சேர்த்து பொரிய விடவேண்டும் . பொரிந்த பின் வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, வெங்காயதாள் சேர்த்து வதக்கவும்.

6/நன்கு வதங்கிய பின் தண்ணீர், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

7/நன்கு கொதித்து காய்கள் வெந்ததும் மக்ரோனி சேர்த்து கிளறவும். தண்ணீர் முற்றிலுமாக சுண்டியதும் முட்டை கலவை சேர்க்கவும். கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும். சுவையான முட்டை மக்ரோனி தயார்.