முட்டை சேர்க்காமல் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முட்டை சேர்க்காத கேரட் கேக்தேவையான பொருட்கள்:

மைதா – 3/4 கப்
கோதுமை மாவு – 1/4 கப்
துருவிய கேரட் – 1/2 கப்
தயிர் – 3/4 கப்
ஆலிவ் ஆயில் – 1/4 கப்
பால் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1/2 கப்
வெனிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
வால்நட்ஸ் – ஒரு கையளவு

செய்முறை:

வால்நட்ஸை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.

முதலில் மைதா, கோதுமை, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து, சல்லடைக் கொண்டு சலித்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பௌலில் தயிர், பால், சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் ஏலக்காய் பொடி, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கிளறி, பின் அதில் துருவிய கேரட், சலித்து வைத்துள்ள மாவை சேர்த்து, வால்நட்ஸை பொடியாக வெட்டிப் போட்டு, கட்டி சேராதவாறு நன்கு கிளறி விட வேண்டும்.

பின்னர் மைக்ரோ ஓவனை 182 டிகிரியில் 10 நிமிடம் சூடேற்ற வேண்டும்.

Moist carrot cake with ground almonds and oats for texture

அதற்குள் பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை விரித்து, அதன் மேல் வெண்ணெயை தடவி, மைதாவை சிறிது தூவி, பின் அதில் கேக் கலவையை ஊற்றி, மைக்ரோ ஓவனில் வைத்து 20-25 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.

அடுத்து கேக் நன்கு வெந்து விட்டதா என்று டூத்பிக் கொண்டு குத்திப் பார்க்கும் போது, டூத்பிக்கில் மாவு ஒட்டினால், மீண்டும் ஓவனில் வைத்து 5-10 நிமிடம் பேக் செய்து இறக்க வேண்டும்.

இறுதியில் ஓவனில் இருந்து எடுத்த உடனேயே ஒரு ஈரமான துணியில் அதனை 15 நிமிடம் வைத்து, பின் அதனை ஒரு தட்டில் குப்புற தட்டி, அதன் மேல் உள்ள பட்டர் பேப்பரை எடுத்து, 1 மணி நேரம் கழித்து, கத்தியால் துண்டுகளாக்கினால், முட்டை சேர்க்காத கேரட் கேக் ரெடி !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here