முடி உதிர்வை சரிசெய்யும் உணவுகள்

0
854

 மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, இரத்தசோகை, ஹைபோதைராய்டிஸம், வைட்டமின் பி குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, கீமோதெரபி ஆகியவற்றால் முதி உதிர்வு பிரச்சனை ஏற்படும். இதனை சரி செய்ய இவற்றை பின்பற்றுங்கள்.

புரதம்

புரதம் தலைமுடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அத்தியாவசியம். புரத குறைபாட்டால் தான் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. தினமும் பால், தயிர், பட்டாணி, கோழி, விதைகள் மற்றும் கொட்டைகளை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

பையோட்டின்

முட்டையின் மஞ்சள் கரு, மீன், சர்க்கரைவள்ளி கிழங்கு, அவகாடோ, ஈஸ்ட், விதைகள் மற்றும் பால் பொருட்களில் பையோடின் நிறைந்துள்ளது. இதனால் முடி உதிர்வு பிரச்சனை தடுக்கப்படுகிறது.

மன அழுத்தத்தை குறைக்கும்

மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கூடியதாக இருக்கிறது. வேலை, குடும்ப சூழல், பண நெருக்கடி ஆகியவை உங்களை மன அழுத்தத்தில் தள்ளிவிடும். இதனை குறைக்க நீங்கள் யோக பயிற்சி, தியானம், உடற்பயிற்சி செய்யலாம். குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து நேரம் செலவழிக்கலாம்.

ஹேர் ப்ராடக்ட்

கூந்தல் அடர்த்தியாக, ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் இருக்க இரசாயணங்கள் நிறைந்த ஹேர் ப்ராடக்ட்களை பயன்படுத்த கூடாது. இவை கூந்தலின் அடர்த்தியை குறைத்துவிடும். இவை ஸ்கால்ப்பின் வறட்சியை ஏற்படுத்தி பொடுகு தொல்லையை அதிகரிக்கும். க்ரீக் யோகர்ட் மற்றும் தேன் அல்லது முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஹேர் மாஸ்காக பயன்படுத்தலாம்.

உணவு கட்டுப்பாடு அவசியம்

ஊட்டச்சத்து குறைபாடு தான் முடி உதிர்வுக்கு முக்கிய காரணம். கீட்டோ டயட், வீகன் டயட், லோ கார்ப் டயட் ஆகியவற்றை பின்பற்றினால் உடல் எடை குறைக்கலாம். சரியான உணவு பழக்கத்தை  பின்பற்றினால் முடி உதிராது. 

http://NDTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here