இன்று மக்கள் பலரது கைகளிலும் டெபிட் கார்டுகள் உள்ளது. ஏடிஎம் இயந்திரம் மூலம் டெபிட் கார்டு உதவியுடன் தேவைப்படும் நேரத்தில் பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி டெபிட் கார்டுகளின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கு பதிலாக டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்பிஐ தலைவர்டெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வரதிட்டமிட்டுள்ளோம் என்றும், அதனை நிச்சயம் செய்து முடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் 90 கோடி டெபிட் கார்டுகள் உள்ளன. அதே போல் 3 கோடி கிரெடிட் கார்டுகள் உள்ளன. தற்போது எஸ்பிஐ யோனோ மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கிறது. அதே போல் டிஜிட்டல் முறைகளை ஊக்குவித்து டெபி ட்கார்டுகளை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே 68 ஆயிரம் யோனோ கேஷ் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் யோனோ கேஷ் மையங்கள் நிறுவப்படும். 

யோனோ கேஷ் மையங்கள் மூலம் பண பரிவர்த்தனை எளிதாகும். இதன் மூலம் டெபிட் கார்டுகளின் பயன்பாடு பெருமளவில் குறையும். மேலும் இது கிரெடிட் கார்ட் மாதிரியான சேவைகளை வழங்கும் என தெரிவித்துள்ளார். QR கோடு முறையில் பரிவர்த்தனை என்பதும் மிகவும் எளிதான ஒன்று என தெரிவித்துள்ளார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here