அமெரிக்கா சீனா இடையே நீடிக்கும் வர்த்தகப் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வரும் 20-ஆம் தேதிக்குப் பின் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா சீனா இடையே ஏற்பட்ட வர்த்தகப் போரின் தாக்கமாக கடந்த 8 மாதங்களில் அமெரிக்கா 250 பில்லியன் டாலரை சீனப் பொருட்கள் மீதும், சீனா 110 பில்லியன் டாலரை அமெரிக்கப் பொருட்கள் மீதும் வரியாக விதித்தன.

கடந்த ஒன்றாம் தேதி முதல் குறைந்த பட்சம் 200 பில்லியன் டாலர் வரியை சீனப் பொருட்கள் மீது விதிப்பதாக இருந்த நிலையில் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறி அந்த முடிவை ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வரும் 20-ம் தேதிக்குப் பின் அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பிடையே விதிக்கப்பட்ட வரிகளைத் திரும்பப் பெறும் வகையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு அமெரிக்காவின் புளோரிடாவில் வரும் 27-ம் தேதி டிரம்பின் மரலாகோ (Mar-a-Lago) தோட்டத்தில் நடக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here