430

இந்த வருடம் அமேசான் நிறுவனம் வியாபாரத்தில் புதிய உயரங்களைத் தொடும் என கணித்திருக்கிறார்கள். ஒரு ட்ரில்லியன் வர்த்தகத்தை அது தொடும் என்பது நிபுணர்களின் கணிப்பு. சரி, நமது விஷயத்துக்கு வருவோம். கார்த்தியின் புதிய படத்தின் ஆன்லைன் டிஜிட்டல் உரிமையை அமேசான் வாங்கியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் கிராமிய திரைப்படம், கடைக்குட்டி சிங்கம். கார்த்தியின் அண்ணன் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் கடைக்குட்டி சிங்கத்தை தயாரித்து வருகிறார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் படத்தின் ஆன்லைன் டிஜிட்டல் உரிமையை அமேசான் வாங்கியுள்ளது.

படம் வெளியான பிறகு அமேசான் மொபைல் ஆப் பில் பணம்கட்டி கடைக்குட்டி சிங்கம் படத்தை தேவைப்படுகிறவர்கள் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்