முடியலை… ரொம்ப டயர்டாயிட்டேன்… அரவிந்த்சாமியின் புலம்பல் எதற்காக?

0
339
Arvind Swamy

முடியலை, ரொம்ப டயர்டாயிட்டேன் என்று அரவிந்த்சாமி ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகு முழுமையான வேலைநிறுத்தத்தில் இருப்பதால் சினிமா குறித்து எந்த தகவல்களும் இல்லை. சினிமா நிகழ்ச்சிகளும் இல்லாததால் நட்சத்திரங்களின் ட்வீட் மூலமே எதையும் அறிய முடிகிறது. அரவிந்த்சாமி அவ்வப்போது அரசியல் நிகழ்வுகள் குறித்த தனது கருத்தை ட்வீட் செய்வார். இந்தமுறை திரையுலக வேலைநிறுத்தம்.

“நேர்மையா சொல்றதுன்னா, இந்த ஸ்டிரைக்கால் ஒருமாதிரி டயர்டாயிட்டேன்னு சொல்லலாம். வேலைக்கு திரும்பணும்னு ஆசையா இருக்கு. நாம முன்வச்ச கோரிக்கைகளில், பேச்சுவார்த்தையில் எவ்வளவுதூரம் முன்னேற்றம் இருக்குன்னு ஒரு ஐடியாவும் இல்லை. எல்லாரும் சீக்கிரம் வேலைக்கு திரும்பணும், சினிமா எடுக்கணும்னு வெறுமனே நம்பிக்கை வைக்கிறேன். ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருக்காங்க, விரைவான தீர்வு வேணும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

உங்களுக்கே பேச்சுவார்த்தையின் நிலவரம் தெரியலைன்னா பாவம் தொழிலாளிங்களுக்கு என்னதான் தெரியும்?

இதையும் படியுங்கள்: “அசிஃபாவை கொன்றது சரியே” – சமூக ஊடகத்தில் பதிவிட்டவரை பணி நீக்கம்…

இதையும் படியுங்கள்: மனைவியிடம் இழந்த நம்பிக்கையைத் திரும்பப் பெறுவது எப்படி?

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்