தெலங்கானாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியால் அந்த நகரமே முடங்கியது.

சிஏஏவுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போரட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது. இதையடுத்து, நாடு முழுவதும் இந்தப் போராட்டம் பரவ ஆரம்பித்தது.

பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும், சில தினங்களுக்கு முன்பாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இன்று ஹைதராபாத் நகரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டிற்கும் எதிராக மாபெரும் பேரணி நடந்தது. அதனால் அந்த நகரமே முடங்கிப்போனது.

அரசியல் தலைவர்களின் தலைமை ஏதும் இல்லாமல் வெறும் தேசிய கொடியை பிடித்த படி போராட்டக்காரர்கள் நடைபயணமாக சென்றனர்.

இதேபோல் கர்நாடகாவிலுள்ள கோலார் நகரத்தில் நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இதில் பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here