முடங்கியது வாட்ஸ் அப் செயலி

0
797

வாட்ஸ் அப்  செயலி உலகின் பல்வேறு பகுதிகளிலும் முடங்கியதால் புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் இந்தியா உட்பட உலகம் முழுவதும் தகவல் தொடர்பு சேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப் செயலி தற்காலிகமாக முடங்கியிருக்கிறது. இதனால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த முடக்கம் எதனால் ஏற்பட்டது என அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. தொழில்நுட்பக் கோளாறுகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் ஹேக்கர்களின் கைவரிசையா ? என்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. அவ்வாறு இருப்பின் பலரது வாட்ஸ் அப் செயலிகளும் கண்காணிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here