முகேஷ் அம்பானி உலகிலேயே பழமையான பொம்மை நிறுவனத்தை வாங்கினார்

0
730

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி பிரிட்டனின் பழம்பெரும் பொம்மை நிறுவமான ஹாம்லேஸை வாங்கியுள்ளார். வாங்கப்பட்ட தொகை இதுவரை வெளியிடப்படவில்லை.

ஹாம்லேஸ் பொம்மை நிறுவனத்தை 2015ம் ஆண்டு வாங்கிய சீனாவின் சி பேனர் இன்டர்நேஷனல் நிறுவனத்தோடு அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.

ஹாம்லேஸ் பொம்மை நிறுவனம் 1760ம் ஆண்டு நிறுவப்பட்ட உலகிலேயே மிகவும் பழமையான பொம்மை சில்லறை விற்பனை நிறுவனமாகும். இதற்கு 18 நாடுகளில் மொத்தம் 167 கிளைகள் உள்ளன.

இந்தியாவின் 29 நகரங்களில் 88 ஹாம்லேஸ் பொம்மை கடைகளை ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ஏற்கெனவே நடத்தி வருகிறது.

62 வயதான அம்பானி 50.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.

“பழம்பெரும் ஹாம்லேஸ் பிராண்ட் முழுவதையும் வாங்க வேண்டுமென நீண்ட நாட்களாக இருந்து வந்த கனவு இப்போது நனவாகியுள்து,” என்று ரிலையன்ஸ் பிராண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி தர்ஷன் மேத்தா அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

பிரெக்ஸிட் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலின் வீழ்ச்சியை காரணம் காட்டி 9.2 பில்லியின் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டதாக கடந்த ஆண்டு ஹாம்லெஸ் தகவல் வெளியிட்டது.

பிரிட்டனில் நான்கு கடைகளை தொடங்கிய இந்த பொம்மை நிறுவனம் பின்னர் இரண்டு கடைகளை மூடிவிட்டது,

இருப்பினும், 1881ம் ஆண்டு திறக்கப்பட்ட லண்டனின் ரிஜெண்ட் தெருவிலுள்ள முதன்மை கடை, மக்களை அதிகமாக ஈர்க்கின்ற நகரத்தின் முக்கிய இடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

ஏழு மாடிகளில் சுமார் 50 ஆயிரம் வரிசைகளில் இங்கு பொம்மைகள் விற்கப்படுவதாக மதிப்பிடப்படுகிறது.

Courtesy: bbc