துளசி மிகவும் பழமையான மூளிகைககளில் ஒன்று. குணப்படுத்துதல் மற்றும் ஆரோக்கியம் அளித்தல் இரண்டுக்கும் முக்கிய காரணி இது. கோயில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர். அவ்வளவு நன்மை தரும் துளசியின் நாம் அறிந்திராத சில பயன்களை பார்ப்போம்.
 

 
சிறந்த செரிமான பொருள்:

துளசியை உண்பதால் செரிமானத் திறன் மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. தலைவலி மற்றும் துாக்கமின்மையை கட்டுப்படுத்துகிறது. உடலில் சுரக்கும் அமிலத்தின் அளவை சீராக வைத்து உடலின் பிஎச் அளவை கட்டுப்படுத்துகிறது.
 

அழற்சி தடுப்பான்:

துளசி அழற்சி தடுப்பானாக செயல்பட்டு பல்வேறு நோய்கள், எதிர்ப்புதிறன் குறைபாடுகளை சரிசெய்கிறது. மேலும் இருதய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளையும் குறைக்கிறது. துளசியை உட்கொள்வதால், காய்ச்சல், தலைவலி, இருமல் ஆகியவையும் குணப்படுத்துகிறது.

 

தீவிர பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு:

துளசியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ குணம், உடலில் உள்ள திசுக்களுக்கு தீவிர பாதிப்புகள் ஏற்படும்போது அதை சமாளிக்கும் ஆற்றலை அளிக்கிறது. உடலில் உள்ள செல்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது.
 

தோல் :

துளசி தோலுக்கு சிறந்த மருந்தாகும். தோலில் உள்ள அழுக்கு அசுத்தங்கள், முகப்பரு ஆகியவற்றை நீக்குகிறது. துளசி, சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் கலவையை முகத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் பொலிவுறும்.

 

பதற்றத்தைத் தணிக்கும்:

துளசியில் உள்ள எண்ணை மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை நீக்குகிறது. மனச்சோர்வை நீக்கி மகிழ்ச்சியை அளிக்கிறது.
 

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்:

துளசி சர்க்கரை நோயாளியின் ரத்தத்தில் சர்க்கரை அளவு மெதுவாக பரவ வழிசெய்கிறது. எனவே இதன் மூலம் சர்க்கரை நோய் தீவிரமாகாமல் கட்டுக்குள் இருக்கும்.
 

துளசி இலையை அரைத்து துவையலாக செய்து சாப்பிட சுவையானது, ஆரோக்கியமானது. மேலும் பிரியாணியில ்புதுினாவோடு சேர்த்து சமைத்தால் நறுமணம் கூடும். துளசியை ஆருஞ்சோடு சேர்த்து ஜூஸஅ செய்து குடிக்கலாம். வெயிலுக்கு நல்லது, சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here