டாடா குழுமத்தின் பிராண்டு ஆலோசகரான சுஹெல் செத் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலைநில், அவருடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது டாடா குழும நிறுவனம்

#MeToo: மிகவும் பிரபலமான ஆலோசகரான செத், கோகோ கோலா, டெல்லி அரசு மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களிலும் பணி புரிந்துள்ளார்
 டாடா குழுமத்தின் பிராண்டு ஆலோசகரான சுஹெல் செத் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலைநில், அவருடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது டாடா குழும நிறுவனம். அவரடுனான ஒப்பந்தம் அடுத்த மாதம் முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என்று டாடா குழுமம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டாடா குழும நிறுவனம், ‘நவம்பர் 30, 2018 உடன், சுஹெல் செத் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது’ என்று தெரிவித்துள்ளது. 
இந்த விவகாரம் குறித்து டாடா நிறுவனத்துக்கு நெருக்கமான வட்டாரம், ‘பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தவுடன், செத் உடனான தொடர்பை டாடா நிறுவனம் துண்டித்துக் கொண்டது. மேலும், அவருடனான ஒப்பந்தத்தையும் உடனடியாக முடிக்க முடிவெடுக்கப்பட்டது’ என்று கூறியது.

இது குறித்து கேட்டறிய செத்திடம் நாங்கள் தொடர்பு கொண்டோம். அவர் கருத்து கூற மறுத்துவிட்டார். 

2016 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில், சைரஸ் மிஸ்ட்ரியால் மிகப் பெரும் குழப்பம் வந்தது. அப்போது செத்,
பிராண்டு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். மிகவும் பிரபலமான ஆலோசகரான இவர், கோகோ கோலா, டெல்லி அரசு மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களிலும் பணி புரிந்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here