தோசை, நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல்மேக்கர் கிரேவி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Image result for meal maker gravy

தேவையான பொருட்கள் :

மீல் மேக்கர் – 100 கிராம்  

சி.வெங்காயம் – 100 கிராம்  

தக்காளி – 3  

இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு  

பச்சை மிளகாய் – 2  

கடுகு – சிறிதளவு  

பட்டை, கிராம்பு – சிறிதளவு  

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்  

மஞ்சள் தூள் – சிறிதளவு  

தேங்காய் துருவல் – கால் கப்

கப்  உப்பு, எண்ணெய் – தேவைக்கு

கொத்தமல்லி, புதினா தழை – சிறிதளவு

Image result for meal maker gravy

செய்முறை:

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் மீல் மேக்கரை கொட்டி அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு வெந்ததும் கால் மணி நேரம் ஆறவைக்க வேண்டும்.

தக்காளி, வெங்காயத்தை நறுக்கி தனித்தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

தேங்காய் துருவலையும் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காய விழுதை சேர்த்து கிளறவும்.

வெங்காய கலவை பொன்னிறமாக மாறியதும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

பின்னர் மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறிவிடவும்.

மீல் மேக்கரில் இருக்கும் தண்ணீரை பிழிந்தெடுத்து விட்டு அதனையும் கொட்டி கிளறவிடவும்.

அதனுடன் போதுமான அளவு தண்ணீர், தேங்காய் விழுதை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி, புதினா தழையை தூவி இறக்கி பரிமாறலாம்.

சூப்பரான மீல்மேக்கர் கிரேவி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here