இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு மற்றொரு தலைவலியாக மாறியுள்ளது

இந்தியாவில் கடந்த ஆண்டும் வெட்டுக்கிளிகள் அட்டகாசம் இருந்தாலும், இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பல்வேறு மாநிலங்களுக்கு படையெடுத்துவருகின்றன. ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் கூட்டம், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் பயிர்களை துவம்சம் செய்துள்ளன.

மணிக்கு 15 முதல் 20 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் வெட்டுக்கிளிகள் ஒரு நாளில் 150 கிலோமீட்டர் வரை கடக்கும். குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் தங்களது படையை தொடர்ந்து பெருக்கிவருகின்றன. இவை ஒவ்வொரு மாநிலங்களாக படையெடுத்துச் செல்வதால் மாநில அரசுகள் அச்சத்தில் உள்ளன.

இந்நிலையில் வெட்டுக்கிளிகளை வைத்து பலரும் மீம்ஸ் உருவாக்கி வருகின்றனர். அதில் நடிகர் விவேக் ரன் படத்தில் நடித்த காட்சியை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் அவருக்கு கண்ணுக்கு தென்பட, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்றீங்க. யாரை எல்லாம் ஓட்டுரீங்க. மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க” என்று பாராட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here