ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (நவ.13), இராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் நடத்தினர். அதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிச்சை ஆரோக்கியதாஸ் என்பவருக்கு இடது கை மணிக்கட்டுக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த ஜான்சன் என்ற மீனவரின் இடது தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் தமிழில் பேசியபோது, இந்தியில் பேசுமாறு அவர்களை கடலோர காவல்படையினர் அடித்ததாக, மீனவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் இந்திய கடலோர காவல்படையினர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தமிழக கடலோர காவல்படையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதையும் படியுங்கள்: கலகலப்பு 2 இப்போது சன் கைவசம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்