அயர்லாந்து- நியூஸிலாந்து மகளிர் அணிகள் இடையேயான ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது.

கடந்த சனிக்கிழமையன்று(ஜூன் 09) டப்ளினில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிராக 490 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தது நியூஸிலாந்து மகளிர் அணி. ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகளிலேயே இது அதிகபட்சமாகும். அந்த ஆட்டத்தில் நியூஸி 346 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து அதிரடியாக ஓரே வாரத்தில் இரண்டாவது முறையாக 400 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளது.

ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இதுவரை எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களை இங்கிலாந்து – 444/3. 2016-ல் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்தது.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் – 455/5. 1997-ல் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக நியூஸிலாந்து எடுத்தது.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 10) நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் நியூஸிலாந்து மகளிர் அணி 418 ரன்களை குவித்து 112 ரன்களுக்குள் அயர்லாந்து அணியை சுருட்டி, 306 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

DfMJu-7W4AAfIKW

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்