மீண்டும் விஜய்யுடன் கூட்டணி? இயக்குனர் ஷங்கரின் பதில் என்ன தெரியுமா?

0
368

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு ரீமேக்காகி வெளியான படம் ‘நண்பன்’.

 ஷங்கரின் இயக்கத்தில் அவரது கதையில் விஜய் நடிப்பது எப்போது என ரசிகர்களும் கோலிவுட் பிரபலங்களும் அவ்வப்போது கேள்வி எழுப்புவது வழக்கம்.

அண்மையில் இணையதள நிறுவனம் ஒன்றின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் ஷங்கரிடம் மீண்டும் விஜய்யுடன் பணியாற்றுவது எப்போது என எழுப்பப்பட்ட கேள்விக்கு “நானும் ரெடி; அவரும் ரெடி. எப்போது வேண்டுமானாலும் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளது. அதற்கு அறிவிப்பு விரைவில் வெளியாகும்” எனக் கூறியுள்ளார்.

அநேகமாக கமலுடனான ‘இந்தியன் 2’ படம் முடிந்தபிறகு விஜய்யை வைத்து ஷங்கர் படம் எடுப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இருப்பினும், 2020ஆம் ஆண்டு இறுதியிலேயே ‘இந்தியன் 2’ படத்தின் பணிகள் முடிவடையும் . 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here