ப்ளிப்கார்ட் ஆன் – லைன் தளத்தில் Month-End Mobiles Fest Sale-யும் Flipkart Grand Gadget Days சலுகை விலை விற்பனையையும் அறிவித்துள்ளது. இந்த கேஜெட் டேஸ் சேலானது இன்று (ஆகஸ்ட் 27) முதல் ஆகஸ்ட் 29 வியாழக்கிழமை வரை தொடரும். இந்த விற்பனையின் கீழ், Boat நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அக்ஸசெரீஸ்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி அளிப்பதாக ப்ளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 


மெல்லிய மற்றும் எடை குறைவான லேப்டாப்களை தயாரிக்கும் ஆசஸ்(#ASUS) மற்றும் ஏசரின்(#acer) லேப்டாப்கள் ரூ.33.990 முதல் கிடைக்கிறது. Wearables-களை பொறுத்தவரை ரூ.1,299-க்கும் மற்றும் 1.5TB  ஹார்ட் டிஸ்க்குகள் ரூ.3,999-க்கும் கிடைக்கிறது. இந்த ப்ளிப்கார்ட் விற்பனையில் இன்டெக்ஸ் மற்றும் அம்பிரேன் நிறுவனங்களின் அதிக திறன் கொண்ட பவர் பேங்குகள் ரூ.1,099 முதல் வாங்கிக்கொள்ளலாம். 

இந்த சிறப்பு விற்பனையின் கீழ், கோர் ஐ5 லேப்டாப்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. உடன் மெல்லிய கனம் குறைந்த லேப்டாப்கள் ரூ.33.990-க்கு கிடைக்கிறது. உதாரணமாக, Asus VivoBook Corei3 seventh-gen மாடல் ரூ.33.990-க்கு வாங்கிக்கொள்ளலாம். 

ஆசுஸ், ஏசர் மற்றும் பிற பிராண்டுகளின் கேமிங் லேப்டாப்கள் ரூ.49,990-க்கும் மற்றும் Asus ZenBook Corei58th gen மாடல் ரூ.62.990-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1TB HDD கொண்ட Acer Aspire 3Pentium Gold ரூ.18.990-க்கு வாங்கலாம். 

ஆப்பிளின் மேக்புக்கின் ஆரம்ப விலை ரூ.67,990-யில் ஆரம்பிக்கிறது. மேலும் ஆப்பிள் மேக்புக்களுக்கு நோ காஸ்ட் EMI, எக்ஸ்சேன்ஜ் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இது தவிர்த்து பல லேப்டாப்களின் மீதான சலுகைகள் மற்றும் ஒப்பந்தங்களை ப்ளிப்கார்ட் அதன் பிரத்யேக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

லேப்டாப்களை தவிர்த்து இந்த சலுகை விலை விற்பனையில் Canon 3000D DSLR-ஐ ரூ.19,999-க்கு விற்பனை செய்கிறது. மேலும் மொபைல் பாகங்கள் ரூ.89-க்கும், டிரிம்மர்கள் ரூ.299-க்கும், மொபைல் பேக் கவர்கள் ரூ.199-க்கும், வயர்லெஸ் பிரிண்டர்கள் ரூ.2,599-க்கும் மற்றும் மவுஸ் & கீபோர்ட்கள் ரூ.199-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

ஆப்பிள் ஐபாட் ரூ.26,999-க்கு முதல் ஆரம்பிக்கிறது. பிளேஸ்டேஷன் 4 ரூ.27.490-க்கு கிடைக்கிறது. டாப்ளெட்களை பொறுத்தவரை, Alcatel 1T7 Wi-Fionly tablet ஆனது ரூ.3,999-க்கும், மைக்ரோ சாஃப்ட் சர்ஃபேஸ் கோ ஆனது ரூ.29,999-க்கும் மற்றும் ஹானர் பேட் 5 ரூ.17.999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

கேமிங் ஹெட்செட்டின் விலை ரூ.449-க்கு தொடங்குகிறது. கேமிங் விசைப்பலகைகள் ரூ. 599-க்கும் மற்றும் கண்ட்ரோலர்கள் ரூ.99-க்கும் கிடைக்கிறது.