மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை: ரூ. 4 ஆயிரத்தை தாண்டியது ஒரு கிராம் ஆபரணத் தங்கம்

Gold Rate In Chennai Today

0
175

இன்றுவெள்ளிக்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை  வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி தங்கம் ஒரு கிராம் 4 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக் கிழமையான இன்று(பிப்.21) சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.32,0964-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.34 உயர்ந்து, ரூ.4,012-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த 38 நாட்களில் மட்டும் சுமார் 2000 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது. 

அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ரூ.52.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து ரூ.52,300 ஆகவும் விற்கப்படுகிறது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ………………… 4,012

1 சவரன் தங்கம் ………………… 32,096

1 கிராம் வெள்ளி ……………… 52.30

1 கிலோ வெள்ளி …………….. 51,300

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ………………… 3,978

1 சவரன் தங்கம் ………………… 31,824

1 கிராம் வெள்ளி ……………… 51.60

1 கிலோ வெள்ளி …………….. 51,600

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here