மீண்டும் பணிகளைத் தொடர்ந்த விஜய்சேதுபதி

Vijay Sethupathi has begun dubbing for his upcoming film, Laabam, directed by SP Jananathan.

0
113

விஜய்சேதுபதி புரொடக்ஷன் சார்பில் தயாரித்து, நடித்து வரும் லாபம் படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கினார்.

இந்நிலையில், தற்போது படப்பிடிப்பு தவிர மற்ற பணிகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி இருப்பதால் தனது சொந்தப் படத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று(புதன்கிழமை) இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார்.  அதனை இயக்குனர் ஜனநாதன் மேற்பார்வை செய்தார். நடிகர் கலையரசனும் நேற்று லாபம் படத்திற்கு டப்பிங் பேசினார்.

இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், சாய் தன்ஷிகா, ஜெகபதி பாபு, ஹரிஷ் உத்தமன், நிதிஷ் வீரா உள்பட பலர் நடிக்கிறார்கள். இமான் இசை அமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இயற்கை விவசாயம் பற்றி பேசுகிற படம். விரைவில் நெட்பிளிக்சில் வெளியாகிறது.

முன்னதாக, கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்புகள் முடங்கியுள்ள நிலையில், விஜய் சேதுபதி,  படப்பிடிப்பிலோ, அது தொடர்பானபணிகளிலோ கலந்து கொள்ளாமல் இருந்தது  குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here