பியார் பிரேமா காதல் படத்தை தயாரித்த யுவன் சங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் தங்களின் இரண்டாவது படத்தை அறிவித்துள்ளது. இளன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

யுவன் – செல்வராகவன் – ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணா மூவரும் இணைந்திருந்த நேரத்தில் வெள்ளை யானைகள் (ஒயிட் எலிபெண்ட்ஸ்) என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். அந்த நிறுவனம் படங்கள் எதுவும் தயாரிக்காமலே மூடப்பட்டது. நண்பர்கள் விரோதிகளாக பிரிந்தனர்.

சில வருடங்கள் முன்பு யுவன் ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதில் பார்ட்னர் யாருமில்லை, யுவனே எல்லாம். முதல் தயாரிப்பாக சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கொலையுதிர்காலம் படத்தை லண்டனில் தொடங்கினர். தொடங்கிய உடனே அப்படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என செய்திகள் வந்தன. கதையை காப்பியடிக்கவில்லை, கதாபாத்திரத்தை மட்டுமே ஹாலிவுட் படத்திலிருந்து எடுத்திருக்கிறேன் என சக்ரி டோலட்டி விளக்கமளித்தார். அதன் பிறகு கொலையுதிர்காலம் படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. அதன் பிறகு நயன்தாரா நடிப்பில் அரைடஜன் படங்கள் வெளியாகிவிட்டன.

இந்நிலையில் சென்ற வருடம் யுவன் பியார் பிரேமா காதல் என்ற படத்தை தொடங்கினார். அறிமுக இயக்குநர் இளன் படத்தை இயக்கியிருந்தார். பிக் பாஸ் பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த அந்தப் படம் வெளியாகி கமர்ஷியலாக வெற்றி பெற்றது. யுவனுக்கு நல்ல லாபம். இப்போது மீண்டும் இளன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறார். அதற்கான அறிவிப்பை ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் யுவன்.

விரைவில் படம் குறித்த மேலும் அதிக தகவல்களை வெளியிட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here