மீண்டும் டோனி: நான் சொல்ல தேவையா?: சேவாக்

Virender Sehwag expects this year’s IPL to be “extra special” and a major reason for that is M.S. Dhoni getting back on the pitch after announcing his international retirement following a year-long sabbatical from the game.

0
264

இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக், ஐபிஎல் போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளில் எம்எஸ் டோனியை அதிக அளவில் பார்க்க இயலாது. இந்நிலையில் டோனியை மீண்டும் பார்ப்பது ஐபிஎல் 13-வது சீசனுக்கு கூடுதல் சிறப்பு என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘இந்த ஐபிஎல் தொடர் ஒவ்வொருவருக்கும் கூடுதல் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். வீர்கள், ரசிகர்களுக்கு டோனி மீண்டும் பிட்சில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கும் என்பது உறுதி. இன்னும் ஏராளமானவை இருக்கிறது. நான் சொல்ல தேவையா?.

லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருக்கும்போது நான் ஏராளமான பழைய போட்டிகளை பார்த்து நேரத்தை செலவழித்தேன. என்னுடைய சொந்த இன்னிங்ஸ் உள்பட பலவவற்றை குறித்து ஆராய்ந்தேன். கிரிக்கெட் இந்தியர்களின் டிஎன்ஏ-வில் ஒரு பகுதியாக இருக்கிறது. அது திரும்புவதற்காக நாங்கள் பெருமூச்சுடன் காத்திருக்கிறோம்’’ என்றார்.

இந்திய  அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக விளையாடிய பின் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை.

இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் சுமார் ஒருவருடத்திற்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here