ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், ஏர்செல் நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக அதன் டவர் நிறுவனங்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. டவர் நிறுவனங்களுடன் ஏற்பட்ட இந்தப் பிரச்சினை காரணமாக ஏர்செல் வாடிக்கையாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். மேலும் பல வாடிக்கையாளர்கள் வேறுநிறுவனங்களுக்கு மாறும் நிலையும் ஏற்பட்டது. இதனையடுத்து, ஏர்செல் நிறுவனம் டவர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பலன்பாக ஏர்செல் சேவை ஓரளவு சீரடைந்திருந்தது.

இந்நிலையில் டவர் நிறுவனங்களுடன் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் சிக்னல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்