நடிகர் தனுஷ் நடிக்க கவுதம் மேனன் இயக்கிதயாரித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இத் திரைப்படம் பல காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது.  இந்நிலையில் எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்பும் வெளிவராமலேயே இருந்தது. ஏற்கெனவே படத்தின் பாடல்கள் வெளியாகிஹிட் அடித்திருப்பதால், அந்த படத்துக்கு எதிர்பார்ப்பும் எகிறியது. 

சமிபத்தில் படத்தின் புதிய ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு செப்டம்பர் 6 ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என்று அதிகார பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் அறிவிப்பு வெளியானது போல் படம் நாளை(வெள்ளிக்கிழமை) வெளியாகாது என தெரிவிக்கப்படுகிறது. படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு சில கடன்கள் நிலுவையில் இருப்பதால் அதனை தீர்ப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கிறது. அந்தப் பிரச்னைகள் இன்றே தீர்க்கப்பட்டால் நாளை வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்திரைப் படம் நாளை வெளியாகாத பட்சத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி வெளி வரவாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டதாக அதிகார பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.