அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் தென்கொரியாவுக்கு சென்றார். அப்போது அவரை , ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட்ட கொரிய எல்லையில் பகுதியில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு மிக இணக்கமானமுறையில் நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன. இரு நாடுகளும் கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்றபகுதியாக மாற்றுவதற்கு தொடர்ந்து பேசுவது என ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது. 

அதைத் தொடர்ந்து கிம் ஜாங் அன்னிடம் இருந்து தனக்கு ஒரு அழகான கடிதம் வந்துள்ளதாகடிரம்ப் சமீபத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவும்,தென்கொரியாவும் போர் பயிற்சியில் ஈடுபடுவது கிம் ஜாங் அன்னுக்கு கடும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவர் இருநாடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிற வகையில் மீண்டும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளைஏவி சோதித்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 2 குறுகிய தொலைவு ஏவுகணைகளைஏவி வடகொரியா சோதித்துள்ளது. இந்த ஏவுகணைகள், தெற்கு  ஹேம் கியாங் மாகாணத்தில் ஹாம்ஹங்  நகரில் இருந்து ஏவப்பட்டுள்ளன. அவை, 400 கி.மீ. தொலைவுக்கு  பறந்து சென்று, கொரிய தீபகற்பத்தில் இருந்து கிழக்கில் ஜப்பான்  கடலில் போய் விழுந்துள்ளது.

2 வாரங்களில் 5வதுமுறையாக ஏவுகணைகளை வடகொரியா சோதித்துப்பார்த்து இருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.