வடகொரியா இன்று காலை 2 குறுந்தொலைவு ஏவுகணைகளை சோதனை நடத்தியுள்ளது. தெற்கு பியாங்கன்  மாகாணத்தில் இருந்து கிழக்குப் பகுதியை நோக்கி ஏவுகணைகளை செலுத்தி அந்நாடு பரிசோதித்துள்ளது.

இந்த ஏவுகணைகள், 330 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாய்ந்து சென்றதாக தென்கொரிய ராணுவமும் குறிப்பிட்டுள்ளது.
வடகொரியா மற்றும் தென்கொரியா இடையேயான எல்லைப் பகுதியில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கடந்த ஜூன் மாதம் சந்தித்துப் பேசினர். அதன்பிறகு வடகொரியா ஏவுகணைகளை சோதனை நடத்தியிருப்பது இது 8ஆவது முறையாகும்.

அமெரிக்காவுடன் இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக வடகொரியா வெளியுறவுத் துறை இணையமைச்சர் சொ சன் ஹுஇ தெரிவித்திருந்தார். அவர் இவ்வாறு தெரிவித்த சில மணி நேரங்களில் ஏவுகணைகள் சோதிக்கப்பட்டுள்ளன.