இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்துள்ளது. 4 படகுகளில் அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த ராமேஷ்வரம் மீனவர்களையும் இலங்கை கடற்படை அடித்து விரட்டினர்.

60 நாட்களுக்கு மீன்பிடித்தடைக்காலம் அமலில் இருந்த நிலையில், தடைக்காலம் முடிந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை கடற்படை அடித்து விரட்டியதால், மீன் பிடிக்க முடியாமல் நிலையில் ராமேஷ்வரம் மீனவர்கள் கரை திரும்பியிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை, மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச்சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடுக்கடலில் மேலும் 2 படகுகளுடன் 8 மீனவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here