தமிழ் சினிமாவில் மீடூ விவகாரம் தீவிரமடைய காரணமாக இருந்தவர் பாடகி சின்மயி. பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்ததாக சின்மயி கவிஞர் வைரமுத்து மீது வைத்த மீடூ புகார் தமிழகத்தை உலுக்கியது. சின்மயி குறிப்பிட்ட சம்பவம் எந்த வருடம் நடந்தது என்பது சின்மயிக்கே தெளிவில்லாமல் இருந்ததும், இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் நடன இயக்குநர் கல்யாண் மீது விளையாட்டாக சொன்ன மீடூ புகாரை சின்மயி விளம்பரப்படுத்தி, கல்யாணின் பெயரை களங்கப்படுத்தியதும் சின்மயின் குற்றச்சாட்டுகள் மீதான நம்பகத்தன்மையை அசைத்துப் பார்த்தன. கடைசியில் மீடூ ஒரு கேளிக்கை விளையாட்டாக மாறியது. 

மீடூ குறித்து பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியும், ஒய்,.ஜி.மகேந்திரனும் கருத்து தெரிவித்திருந்தனர். “விளம்பரத்துக்காக என்றோ நடந்தது, நடக்காதது, நடந்திருக்க வேண்டியது இடிதையெல்லாம் இப்போது வெளியே சொல்வது தேவையா? இதனால் இந்த குற்றச்சாட்டை சொல்கிறவர்களின் குழந்தை, குடும்பம்தான் பாதிக்கப்படுகிறது. மீடூ மூலம் அவர்கள் எதை நிரூபிக்க பார்க்கிறார்கள். நான் பெண்கள் பக்கம் நிற்பவள் என்றாலும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டேன். அரசியல்வாதிகளையும், பிரபலமானவர்களையும் சர்ச்சையில் சிக்க வைப்பதால் மட்டும் பெரிய ஆளாகிவிட முடியாது, அப்படி செய்வது கேவலம்” என்று சௌகார் ஜானகி காட்டமாக கூறியிருந்தார். அதற்கு சின்மயி ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

“சௌகார் ஜானகி நடந்தது, நடக்காதது என்று வீடியோவில் கூறி இருக்கிறார். நான் நேர்மையாக இருந்ததால் அதைப் பார்த்ததும் அழுதேன். இந்தத் துறையில் மோசமானவர்களிடம் இருந்து எத்தனைபேர் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மீடூ ஒரு தளமாக உள்ளது” என அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here