1. மீடியாக்களுக்கு தீனி போடுவதை நிறுத்துங்கள் என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் எட்டு வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோன்று, உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே பல்வேறு பிரச்சினைகளில் பாஜகவினர தெரிவித்துவரும் கருத்துக்கள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நமோ ஆப் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய பிரதமர் மோடி, மீடியாக்களுக்கு தீனி போடுவதை நிறுத்துங்கள் என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் அவர், மீடியாக்கள் கேமராக்கள் முன் பேசும்போது, சமூக விஞ்ஞானிகள் போலவும், ஆய்வாளர்கள் போலவும் பாஜகவினர் நினைத்துக்கொண்டு பேசுவதாகவும், வாய் தவறி கூறும் வார்த்தைகளை மீடியாக்கள் ஊதி பெரிதாக்குவதாகவும் தெரிவித்தார்.

2. மகாராஷ்டிரா மாநிலம் கண்டிவலி, கோகுல் நகர் பகுதியில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் சச்சின் சாவந்த் என்பவர் நேற்று (ஏப்.22) மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்.7ஆம் தேதியன்று, அஹமத்நகர், கேத்காவுன் பகுதியில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக்கொல்லபட்டனர்.

3. பெட்ரோல் விலை லிட்டருக்கு 77.29 ரூபாயகவும், டீசல் விலை லிட்டருக்கு 69.37 ரூபாயாகவும் உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூன் மாதம் முதல், தினமும் மாற்றியமைத்து வருகின்றன. கடந்த நான்காண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வைச் சந்தித்து வருகிறது.

4. மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தின், வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குமிடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

5. 12 வயதுக்குட்பட்ட சிறார்களைப் பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்