திரு இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறார்கள்.

மிஸ்டர் சந்திரமௌலியில் கௌதம் கார்த்திக், கார்த்திக் இணைந்து நடித்துள்ளனர். ரெஜினா நாயகி. முக்கியமான வேடத்தில் வரலட்சுமி. ஸ்போர்ட்ஸ் காமெடிப் படமாக தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் இயக்குநரின் நிர்ப்பந்தத்தால் பிகினி உடையில் ரெஜினா நடித்துள்ளார். படம் முடிந்து யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
ZxXClYrH_400x400
தொடர்ச்சியாக பெரிய படங்கள் வெளியாவதால் எப்போது மிஸ்டர் சந்திரமௌலியை வெளியிடுவது என்று குழப்பமாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் சில தினங்கள் முன்பு ட்விட்டரில் கவலைப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜுலை 6 படத்தை வெளியிடுவது என முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

காலா, டிக் டிக் டிக், அசுரவதம் படங்களின் வெளியீட்டுக்கு வழிவிட்டே ஜுன் மாதத்துக்கு சந்திரமௌலியை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்