மிளகு காரமும் மணமும் கொண்டது. உணவைச் செரிக்க வைப்பது. உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது.காரத்தன்மை கொண்டதும் தொண்டைக்கு இதமளிக்க கூடியதுமான மிளகின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். கேரளாவில் அதிகம் விளையக்கூடிய மருத்துவ குணம் கொண்ட பொருட்களில் ஒன்று மிளகு.காரத்தன்மை கொண்ட மிளகினை அடிக்கடி உணவில் சேர்ப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும், ஜீரண பிரச்சனைகளுக்கு மிளகு நல்ல மருந்தாக அமைகிறது. இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஏ, சி உள்ளிட்ட சத்துக்களும் கல்சியம், இரும்பு, பொஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற விட்டமின்களும் மிளகில் உள்ளன.இதில் உள்ள சுண்ணாம்பு, இரும்பு, மெக்னீஷியம், துத்தநாகம் உள்ளிட்ட உப்புக்கள் உடல் செயல்பாட்டுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. குரல் வளத்தை தூண்ட செய்கிறது. பாலில் கலந்து குடிப்பதால் நல்ல தூக்கத்தை தந்து உடல் களைப்பினை அகற்றுகிறது.

மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது. ஜலதோஷத்தால் சளி இருமல் இருந்தால் மிளகு கசாயத்தோடு பனை சர்க்கரை சேர்த்துப் பருகலாம். உடல் சூட்டினால் வரும் இருமலும் தீரும்.

மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. மிளகு கசாயம் உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது.

தினசரி மிளகு பொடி 1/2 கிராம் வெதுவெதுப்பான நீரில் பருகிவர பசி உண்டாகும். உமிழ்நீரைப் பெருக்கி உணவை செரிக்க உதவும்.

மிளகு, சுக்கு, திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு ஆகியவற்றை சம அளவு பொடி செய்து, 1 கிராம் இருவேளை வெந்நீரில் எடுத்துவர செரியாமை நீங்கி, வயிற்று நோய்கள் நீங்கும்.

தலையில் புழுவெட்டினால் முடி இல்லாமல் இருக்கும் அதனைச் சரிசெய்ய, அந்த இடத்தில் மிளகை அரைத்துப் பூசிவர முடி முளைக்கும்.

தினமும் பல் தேய்க்கும்போது மிளகுடன் உப்பு சேர்த்து தேய்த்து வந்தால் பல் கூச்சம், பல்வலி, வாய்த் துர்நாற்றம் நீங்கி பல் வெண்மையாகும். வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமல் இருக்கும். மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கச் செய்யும்.

மிளகுப் பொடியை தேனுடன் கலந்து இருவேளை எடுத்துவர ஞாபகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் நீங்கும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

இதையும் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்