மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்கள், தங்களது பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மும்பை பங்குச் சந்தை கேட்டுக்கொண்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி, ஏழைப் பெண்களுக்கான இலவச சமையல் எரிவாயுத் திட்டம், பயிர் காப்பீட்டுத் திட்டம், புதிய வாகனங்களுக்கானப் பதிவுகள், செல்ஃபோன் உள்ளிட்டவைகளுடன் ஆதார் எண்ணைக் கட்டாயமாக இணைக்க வேண்டும் மத்திய அரசு உத்தரவிட்டு வருகிறது.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பறிமாற்றத்தை தடுக்கும் விதமாக திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, ஆதார் மற்றும் பான் எண்ணை மார்ச் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு மும்பை பங்குச் சந்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் பிப்.15ஆம் தேதி முதல் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் பான் மற்றும் ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைத்தால் மட்டுமே அதற்கான திட்டங்களின் கணக்குகளைத் தொடங்க முடியும் எனவும் மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்