“மிமிக்ரி செய்து சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்” – கதாசிரியர் ரத்ன குமார் நெகிழ்ச்சி

0
245

லோகேஷ் கனகராஜ் குரலில் பேசி ஆடை பட இயக்குநரின் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்தியது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 64வது படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் சென்னையில் முடிவடைந்ததை அடுத்து டெல்லியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் 64இல் கதாசிரியராக ‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்களை இயக்கிய ரத்ன குமார் பணியாற்றி வருகிறார். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜின் செல்போனில் இருந்து ரத்ன குமாருக்கு கால் செய்து “Machi Happy Birthday Da” என லோகேஷை போல் மிமிக்ரி செய்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார். இதனை டிவிட்டரில் பகிர்ந்த ரத்ன குமார், “Worthu living” எனப் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here